/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் வழிபாடு
/
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் வழிபாடு
ADDED : நவ 06, 2025 07:56 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. பக்தர்கள் பலர் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
*அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில், வீரபத்ர சுவாமி கோயில், பாலையம்பட்டி சுப்பா ஞானியார் கோயில், திருச்சுழி திருமேனிநாதர் கோயில், பன்னிமடம் காளை நாத சுவாமி உள்ளிட்ட கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
*ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னபிஷேகம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு வைத்தியநாதருக்கு சிறப்பு அபிஷேகம் ,யாகசாலை பூஜைகள் நடந்தது . சுவாமிக்கு 200 கிலோ அரிசியில் அன்ன அபிஷேகம் , சகஸ்ர நாம அர்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர் பின்னர் அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
*காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சிவகாமசுந்தரி, அம்பலவாணர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. கம்பிக்குடி சொக்கநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
*சாத்துார் கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று
பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அன்னாஅபிஷேகம் நடந்தது.
அன்னத்தால் சிவன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சிவனுக்கு படைக்கப்பட்ட அன்னம் அர்ச்சனா நதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை நடத்தப்பட்டு கரைக்கப்பட்டது.
பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*ராஜபாளையம் மாயூர நாத சுவாமி கோயில், சொக்கர் கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், பர்வத வர்த்தினி அம்மன் கோயில், கருப்பஞானியார், பொன்னப்ப ஞானியார் கோயில், குருசாமி கோயில், திருச்சிற்றம்பல குருநாதர் கோயில், பறவை அன்னள் காத்தருளிய சுவாமி கோயில், தெற்கு நங்கநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் உள்ளிட்ட கோயில்களில் விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

