/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டும்' * சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி

ADDED : நவ 07, 2025 01:57 AM
விருதுநகர்: ''மேல்நிலை குடிநீர் தொட்டி (ஓ.எச்.டி.,) ஆப்பரேட்டர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குனர் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ராமலிங்கம் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவ லர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 1 முதல் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு அகவிலைப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரூ.100 வழங்கப்படுகிறது. மற்ற துறைகளுக்கு வழங்குவது போல் சதவீதம் அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும் ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு துாய்மை பணியாளர்களுக்கு வழங்குவது போல் வீட்டு வாடகை படி, மருத்துவப்படி போன்ற சலுகைகளையும் வழங்க வேண்டும்.
2000 க்கு முன்னும், பின்னும் என அரசாணை எண் 119 படி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிலையான ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை காவலருக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., போன்ற பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சீருடை, மாஸ்க், பணி உபகரணங்களை தவறாமல் வழங்க வேண்டும். இதுகுறித்து விரைவில் அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.