/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்திற்கு 3 டாக்டர்கள் நியமனம் மாநாகராட்சி ஒத்துழைப்பு இல்லை
/
சிவகாசி நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்திற்கு 3 டாக்டர்கள் நியமனம் மாநாகராட்சி ஒத்துழைப்பு இல்லை
சிவகாசி நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்திற்கு 3 டாக்டர்கள் நியமனம் மாநாகராட்சி ஒத்துழைப்பு இல்லை
சிவகாசி நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்திற்கு 3 டாக்டர்கள் நியமனம் மாநாகராட்சி ஒத்துழைப்பு இல்லை
ADDED : செப் 30, 2025 03:48 AM
விருதுநகர்: சிவகாசி நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்திற்கு 3 டாக்டர்கள் நியமிக்கப்பட்டும், நாய்களை பிடித்து வருவதில் மாநாகராட்சி ஒத்துழைப்பு வழங்காததால் மையத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகி யுள்ளது.
நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக இனக்கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டு வந்து அறுவை சிகிச்சைக்கு பின் நாய்களை மூன்று நாட்கள் தொடர்ந்து பராமரித்து, எடுத்து வந்த இடத்தில் மீண்டும் விட வேண்டும் என்ற விதி உள்ளது.
நாய் பிடிப்பு, ஏ.பி.சி., மையத்தில் சேர்க்கை, பிடிபட்ட இடங்களிலிருந்து இடமாற்றம் செய்ய ஒரு நாய்க்கு ரூ.200, மருந்துகள், உணவு உட்பட அறுவை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புக்கு ஒரு நாய்க்கு ரூ.1450 மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்க கடந்தாண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் மே மாதத்தில் மேயர் சங்கீதா, கமிஷனர் சரவணன் தலைமையில் மீன் மார்கெட் பகுதியில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் தேவையான பராமரிப்புக்காக மொத்தம் 3 கால்நடை மருத்துவர்கள் மையத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தெருநாய்களை பிடித்து வந்து கொடுப்பதற்கு மாநகராட்சி ஒத்துழைப்பு வழங்காததால் இதுவரை கருத்தடை மையத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும் ராஜபாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நாய்கள் கருத்தடை சிகிச்சை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
சிவகாசியில் 3 டாக்டர்கள் நியமிக்கப்பட்டும் மாநகராட்சியின் ஒத்துழைப்பு இன்மையால் ரோட்டில் நடந்து செல்பவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் தினசரி நாய்களால் கடிப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.