ADDED : ஜூன் 02, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி மாணவிகள் தனியார் நிறுவனங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். மாணவிகள் சந்திரிகா, மோகனா, காவியபகவதி, குணசுந்தரி ஆகியோர் சதன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு அதிகாரி பதவிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன், கல்லுாரி செயலாளர் சங்கர சேகரன், தலைவர் மயில்ராஜன், முதல்வர் ராதா, வேதியல் துறை தலைவர் கோவிந்தராஜ் பாராட்டினர்.-