ADDED : ஜன 25, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019 திட்டத்தின் படி விசைத்தறி பிரிவில் புதிய நாடா இல்லாத தறி, நெசவு முந்தைய பணிகளுக்கான தயாரிப்பு இயந்திரம் கொள்முதல் செய்து, மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதித் திட்டத்தின் கீழ் 10 சதவீதம் மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு, மாநில அரசின் சார்பில் 10 சதவீதம் கூடுதல் மானியத்தொகை வழங்கப்படும்.
இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் சூலக்கரையில் அமைந்துள்ள வி.டி.எம்., மில் நிறுவனத்திற்கு 10 சதவீத கூடுதல் மானியத்தொகை ரூ.21.48 லட்சம் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது, என்றார்.