/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை--சென்னை அரசு விரைவு பஸ்சில் ஏசி பழுதால் வாக்குவாதம்
/
செங்கோட்டை--சென்னை அரசு விரைவு பஸ்சில் ஏசி பழுதால் வாக்குவாதம்
செங்கோட்டை--சென்னை அரசு விரைவு பஸ்சில் ஏசி பழுதால் வாக்குவாதம்
செங்கோட்டை--சென்னை அரசு விரைவு பஸ்சில் ஏசி பழுதால் வாக்குவாதம்
ADDED : மே 14, 2025 07:33 AM
ராஜபாளையம்; செங்கோட்டை சென்னை இடையே இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக குளிர்சாதன பஸ்சில் ஏசி பழுதால் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை- சென்னை இடையே இயக்கப்படும் ஏசி பஸ்சில் நேற்று முன்தினம் மாலை செங்கோட்டையிலிருந்து 12 பயணிகளுடன் புறப்பட்டு வழியில் பயணிகள் ஏறிய நிலையில் பஸ்சில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட படி வந்தனர்.
ராஜபாளையத்திற்கு 7:30க்கு வந்த பஸ்சில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் 20 பெயர் காத்திருந்த நிலையில் ஏசி பழுதை சரி செய்வதற்காக பயணிகளை இறக்கிவிட்டு பழுது பார்க்க சென்றுள்ளார். பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏசி இல்லாத விரைவு பஸ்சை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனால் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் பஸ் புறப்பட்டு சென்றது ஏற்பட்டது.
நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பஸ் வசதி இல்லை எனக் கூறி பயணிகள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.