/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை காந்தி நகர் பஸ் ஸ்டாண்ட்:
/
அருப்புக்கோட்டை காந்தி நகர் பஸ் ஸ்டாண்ட்:
ADDED : மார் 01, 2024 12:06 AM
அருப்புக்கோட்டை, - அருப்புக்கோட்டை காந்தி நகர் மினி பஸ் ஸ்டாண்ட்டில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் இன்றி பயணிகள் அவதிப்படுவதான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானதை அடுத்து கலெக்டர் ஜெயசீலனர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை காந்தி நகரில் நகராட்சி மினி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு கழிப்பறை , குடிநீர் வசதிகள் இருந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலும், பராமரிப்பு இல்லாமலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கலெக்டர் ஜெயசீலன் நேற்று மினி பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் சுகாதார பிரிவு அலுவலர்களிடம் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கழிப்பறைகள் பராமரிப்பு செய்து தர அறிவுறுத்தினார்.

