/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி வாசலுக்கு மந்திரிக்க சென்ற பெண்ணை குத்திய அசரத்
/
பள்ளி வாசலுக்கு மந்திரிக்க சென்ற பெண்ணை குத்திய அசரத்
பள்ளி வாசலுக்கு மந்திரிக்க சென்ற பெண்ணை குத்திய அசரத்
பள்ளி வாசலுக்கு மந்திரிக்க சென்ற பெண்ணை குத்திய அசரத்
ADDED : நவ 22, 2025 12:23 AM
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் பள்ளி வாசலுக்கு மந்திரிக்க சென்ற பெண்ணை அசரத் கத்தியால் குத்தியது பர பரப்பு ஏற்படுத்தியது.
நரிக்குடி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் அரவிந்தன். இவரது மனைவி கெட்சியா (எ ) அஞ்சலி 22. உடல்நிலை சரியில்லாததால் நேற்று பள்ளிவாசலுக்கு மந் திரிக்க சென்றார். அங்கு அசரத்தாக அப்துல் அஜீஸ் 34, இருந்தார். மந்திரித்த போது திடீரென அஞ் சலியை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தினார். அலறியபடி வெளியில் ஓடி வந்தார்.
அவரை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பி ஓட முயன்ற அப்துல் அஜீசை மக்கள் பிடித்து நரிக்குடி போலீசில் ஒப்படைத்த னர். அசரத் மீது ஏற் கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.