/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் அஷ்ரத் கைது
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் அஷ்ரத் கைது
ADDED : டிச 13, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சேர்ந்த 23 வயது பெண் நவ.21ல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்றபோது, அஷ்ரத்(பணியாளர்) முகமது அஜீஸ் தவறாக நடக்க முயன்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். நரிக்குடி போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,கண்ணன் பரிந்துரையில் கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் முகமது அஜீஸ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

