ADDED : டிச 13, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி கட்டனுாரில் மகளிர் திட்டம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வட்டார இயக்க மேலாளர் சோனை முத்து வரவேற்றார். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்ட இயக்குனர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல் தலைமை வகித்தார். பாலியல் வன்முறைக்கு எதிரான வாசகங்களுடன் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
எஸ்.ஐ., தங்கப்பாண்டியன், வக்கீல் கோபாலகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் சித்ரா பேசினார். மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் கவிதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உறுப்பினர் ராமலட்சுமி நன்றி கூறினார்.