ADDED : பிப் 19, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக்கமிட்டி சார்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை விருதுநகர் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வித்யா கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த ஊர்வலம் ஹாஜிபி செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் துவங்கி பாவாலி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து ஹாஜி சிக்கந்தர் ஹவாபிவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 300 மாணவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பாதகைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

