ADDED : நவ 20, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கமிஷனர் குமார் பேசியதாவது;
வீடுகள் தோறும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியம் இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. புதிதாக வீடுகள், கட்டிடங்கள் கட்டும்போது உரிமையாளர்கள், கட்டுமான பணியினர் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். தற்போது இது தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது ,என்றார்.
கூட்டத்தில் நகர அமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலுவலக கந்தசாமி, உதவி பொறியாளர் திவாகர், நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவல்லி, ஒப்பந்ததாரர்கள், கட்டட வரைபடலாளர்கள் பங்கேற்றனர்.
