ADDED : அக் 25, 2026 10:08 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரத்தினம் செவிலியர் கல்லுாரி, டாக்டர் ரத்தினம் மெமோரியல் மருத்துவமனை சார்பாக எலும்பு ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரியின் துணைத் தலைவர் டாக்டர் சிந்துரேகா தலைமை வகித்தார், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., விக்னேஷ் துவக்கி வைத்தார். இதில், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் கோகுல குமார் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் துவக்கப்பள்ளியில் துவங்கி, ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று முடிவடைந்தது. கல்லுாரி மாணவிகள் எலும்பு ஆரோக்கியம் குறித்தான பதாகைகளை ஏந்தி வந்தனர்.
