ADDED : மார் 18, 2025 06:35 AM
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கிராம வங்கியில் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடிக்க முயன்றதில் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வங்கியின் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கும் வங்கி அதிகாரிக்கும் தகவல் கொடுத்தனர். மேலாளர் சுரேஷ்குமார் வங்கியை திறந்த போது உள்ளே இருந்த ஜன்னலின் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன.
டவுன் போலீசாருடன் வங்கியின் உள்ளே சோதனை செய்த போது பணம், நகைகள் திருடு போகவில்லை. கொள்ளையர்கள் ஜன்னலின் கம்பியை அறுத்த போது வங்கியில் இருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததால் ஓடிவிட்டனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.