/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதியில் நிற்கும் கரை பலப்படுத்தும் பணி, புதர்மண்டிய வரத்து ஓடை எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பாதியில் நிற்கும் கரை பலப்படுத்தும் பணி, புதர்மண்டிய வரத்து ஓடை எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாதியில் நிற்கும் கரை பலப்படுத்தும் பணி, புதர்மண்டிய வரத்து ஓடை எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாதியில் நிற்கும் கரை பலப்படுத்தும் பணி, புதர்மண்டிய வரத்து ஓடை எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 13, 2025 12:00 AM

விருதுநகர்: பாதியில் நிற்கும் கரை பலப்படுத்தும் பணி, புதர்மண்டிய வரத்து ஓடை, கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சனைகளால் தண்ணீர் தேக்க முடியாமல் எல்லிங்க நாயக்கன்பட்டி கண்மாய் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர்.
விருதுநகர் செங்குன்றாபுரம் அருகே எல்லிங்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் இந்த கண்மாய் உள்ளது.
இதை சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தை நம்பி மக்காசோளம், பருத்தி, வெள்ளரி, சிவப்புச்சோளம், காய்கறி வகைகளை சாகுபடி செய்கின்றனர். தற்போது கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
இதில் ஷட்டர் பலவீனமாக இருந்ததால் 2023ல் ரோடு முழுவதும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு பின் ஷட்டர் பலப்படுத்தப்பட்டது.தற்போது கரையை பலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக கண்மாயின் ஒரு பகுதியில் நீள் வாக்கில் தோண்டியுள்ளனர்.
அவ்வாறு தோண்டியதில் வந்த மண்ணை கொண்டு தான் கரையில் கொட்டியுள்ளனர். இந்த பணி பாதிவரை மட்டுமே நடந்துள்ளது. கரையை பலப்படுத்திய அதே நேரம் அதை ஆழப்படுத்துவதும் தேவையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கனமழையின் போது இந்த கண்மாய் நிரம்பி விடுகிறது. இந்தாண்டு விருதுநகர் ஒன்றிய பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் கரையிலும் மஞ்சணத்தி, கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. நீர் தேக்குமிடமான கண்மாயின் உள்பகுதியிலும் முழுக்க முழுக்க கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
நீர்வரத்து ஓடைகளும் புதர்மண்டி கழிவுநீர் தேங்குமிடமாக உள்ளன. அவற்றை சரி செய்தால் கண்மாய் நீண்ட மாதங்கள் நிறைந்திருக்கும்.
எனவே இதை அகற்றி, கண்மாயை ஆழப்படுத்தினால் விரைந்து நிரம்புவது தவிர்க்கப்படுவதுடன், நீண்ட மாதங்கள் வரை பயன்படும் ஒன்றாக மாறும். அதற்கான நட வடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுப்பது கட்டாயம்.
கருவேலமரங்களால் சிரமம் திருப்பதிசெல்வம், சமையல் வேலை: கண்மாயின் வரத்து ஓடைகளை துார்வார வேண்டும். பல ஓடைகள் நீர்வரத்துக்கு தடையாக உள்ளன.
கருவேல மரங்களை முற்றிலும் அகற்றினால் மட்டுமே மழைநீர் நீண்ட மாதங்கள் தேங்கும். இல்லாவிட்டில் வந்த வேகத்தில் வற்றத்தான் செய்யும்.
ஆழப்படுத்த வேண்டும் கணேசன், கூலித் தொழிலாளி: பருவ மழை துவங்கி விட்டது. டிச.ல் கனமழை பெய்தால் கண்மாய் நிறைய வாய்ப்புள்ளது.
இருப்பினும் கண்மாயின் தேக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும்.
எங்கள் பகுதியின் முக்கிய நீராதாரமே இக்கண்மாய் தான். விவசாயிகள் வாழ்வு வளம் பெற இக்கண்மாயை ஆழப் படுத்த வேண்டும்.
சிறப்பு கவனம் தேவை வீரலெட்சுமி, விவசாயக்கூலி: கண்மாய் வறண்டு காணப்படுவது வேதனை அளிக்கிறது. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறையாவது நிரம்பி விடும்.
இருப்பினும் தற்போது ஒரு துளி கூட நீர் இல்லாமல் காட்சி அளிக்கிறது.
கருவேலங்களை அகற்றி, ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும் லியாகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர், விருது நகர்: கண்மாயின் நீர் தேக்கும் திறன், கரையின் பலவீனமான பகுதிகள் போன்றவை ஆய்வு செய்யப்படும். அதற்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

