/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாறு, கிருதுமால் நதி குறுக்கே ரூ.25 கோடியில் உயர் மட்ட பாலம்
/
குண்டாறு, கிருதுமால் நதி குறுக்கே ரூ.25 கோடியில் உயர் மட்ட பாலம்
குண்டாறு, கிருதுமால் நதி குறுக்கே ரூ.25 கோடியில் உயர் மட்ட பாலம்
குண்டாறு, கிருதுமால் நதி குறுக்கே ரூ.25 கோடியில் உயர் மட்ட பாலம்
ADDED : நவ 13, 2025 12:02 AM
காரியாபட்டி: காரியாபட்டி குண்டாற்றின் குறுக்கே இரு இடங்கள், நரிக்குடி கிருதுமால் நதியின் குறுக்கே ஒரு இடத்தில் ரூ.25 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
காரியாபட்டி நமச்சிவாயபுரம், வையம்பட்டி அருகே குண்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், நரிக்குடி உச்சனேந்தல் கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட ரூ.25 கோடி மதிப்பீட்டில், பணிகளை துவக்க அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி, பேசியதாவது:
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தி.மு.க., ஆட்சியில் அதற்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நன்றி கடனாக எப்போதும் நாங்கள் இருப்போம். இன்னும் பல கிராமங்களுக்கு ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டி உள்ளது. அதை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்து பணி முடிவடைந்து பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் பஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுரை மாவட்டம் மருதங்குடி, வையம்பட்டி, மாந்தோப்பு வழியாக தார் ரோடு அமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும், என்றார்.