/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு
/
பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு
ADDED : மார் 15, 2024 06:26 AM
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தேர்தல் பணிக்கான அலுவலக திறப்பு விழா நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து திறந்து வைத்தார். லோக்சபா அமைப்பாளர் வெற்றிவேல் கூறியதாவது: 2047ல் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசு நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றுவோம்.
மக்களிடம் வாக்குறுதி தொடர்பாக கருத்து கேட்டு வருகிறோம்.பிரதமர் மோடி திட்டத்தால் பயனடையாத நபர்கள் யாரும் இல்லை. வருவாய் ஆதரவு திட்டம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் உதவி செய்துள்ளோம். எங்கள் தேர்தல் பணி காலை 6:00 மணி முதலே துவங்குகிறது.சமுதாய தலைவர்களை சந்திக்க குழு போட்டுள்ளோம், என்றார்.
இணை அமைப்பாளர்கஜேந்திரன், விருதுநகர் சட்டசபை பொறுப்பாளர்சங்கரேஸ்வரி, நிர்வாகிகள்காமாட்சி, காளீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

