/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரசாரத்தை துவக்கியது பா.ஜ., தொகுதி கோரிக்கைகளும் கேட்பு
/
பிரசாரத்தை துவக்கியது பா.ஜ., தொகுதி கோரிக்கைகளும் கேட்பு
பிரசாரத்தை துவக்கியது பா.ஜ., தொகுதி கோரிக்கைகளும் கேட்பு
பிரசாரத்தை துவக்கியது பா.ஜ., தொகுதி கோரிக்கைகளும் கேட்பு
ADDED : பிப் 18, 2026 07:58 AM

விருதுநகர்: விருதுநகர், அருப்புக்கோட்டையில் பா.ஜ., சார்பில் 'நாளை நமதே, தமிழ்நாடும் நமதே,' என்ற தெருமுனை பிரசாரக் கூட்டம் துவங்கியது. சட்டசபை தொகுதியின் கோரிக்கைகளும் கேட்டறியப்பட்டது.
விருதுநகர் மாவட்ட தேர்தல்பொறுப்பாளரான மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,விருதுநகர் சட்டசபை தொகுதியின் கோரிக்கைகளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
இதில் பாதாளசாக்கடை திட்டத்தின் இழுபறி, கவுசிகா நதி திட்ட பணிகள் முழுமையாக முடியாதது, குடிநீர் பிரச்னைகள், அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தேவையான சிகிச்சை பிரிவுகள் கேட்டு பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின் சிவஞானபுரம் ஊராட்சியில் வைத்து'நாளை நமதே, தமிழ்நாடும் நமதே,' என்ற தெருமுனை பிரசாரக் கூட்டம் துவங்கியது.கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சங்கரேஸ்வரி, மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரி, சட்டசபை பொறுப்பாளர் ராமஜெயம் பங்கேற்றனர்.
இதே போல் இன்னொரு தெருமுனை பிரசாரக் கூட்டமும்அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், பொதுச்செயலாளர் சீத்தாராம் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

