sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தாமதமாகும் பாலம் கட்டும் பணி வாறுகாலில் சிக்கிய கார்

/

 தாமதமாகும் பாலம் கட்டும் பணி வாறுகாலில் சிக்கிய கார்

 தாமதமாகும் பாலம் கட்டும் பணி வாறுகாலில் சிக்கிய கார்

 தாமதமாகும் பாலம் கட்டும் பணி வாறுகாலில் சிக்கிய கார்


ADDED : பிப் 18, 2026 07:57 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் உழவர் சந்தை வடபுறம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் வாறுகாலில் பாலம் கட்டாத நிலையில் நேற்று மாலை ஒரு கார் வாறுகாலில் சிக்கி விபத்துக்குள்ளானது.

இப்பகுதி ரோட்டில் இருந்த சிமெண்ட் பாலம் முடிந்ததால் அதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தோண்டி போட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பாலம் கட்டவில்லை. இதனால் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் எளிதில் வர முடியாத நிலை உள்ளது.

ரோட்டை கடந்து செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். பாலம் கட்டுவதில் நகராட்சி அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக வந்த ஒரு கார் வாறுகாலில் சிக்கி விபத்துக்குள்ளானது. நல்ல வேலையாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் அப்பகுதி மக்கள் காரை மீட்க உதவினர்.

உயிர்பலி ஏற்படும் முன்பு பாலம் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us