/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
காரியாபட்டியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 29, 2024 05:07 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் முடுக்கன்குளம் அருகே மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை தடுத்து, நிரந்தரமாக மூட வேண்டும் என பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, செயலாளர் சத்தியபாலன், ஒன்றிய தலைவர் ராஜபாண்டியன், நரிக்குடி ஒன்றிய தலைவர் மகேந்திரன், தொகுதி பொறுப்பாளர் விஜயரகுநாதன், வக்கீல் கார்த்திகைவேல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜீவரத்தினம், தமிழ் வளர்ச்சி பிரிவு அமைப்பாளர் மணிகண்டன், பொறுப்பாளர்கள் ராஜேஸ்வரன், வீரபத்திரன், சண்முகராஜா, ஜெயபாரதி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.