நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் தேசிய மாணவர் படை எழுச்சி தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்தனர்.
கல்லுாரியின் தேசிய மாணவர் படை 9 தமிழ்நாடு சைகை கம்பெனி மாணவர்கள் 40 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில் ரத்ததானம் வழங்கினர்.
அரசு பொது மருத்துவமனை டாக்டர் ரவிசங்கர், கர்னல் சின்ஹா ஆகியோர் மாணவர்களை பாராட்டினார்கள். கமாண்டிங் ஆபிசர் சுபேதார் சுரேந்திர பாண்டியன், ஹவில்தார்கள் ரகுநந்தன், சதீஷ்,மாணவர் படை அதிகாரி மேஜர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.