நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பாளையம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.
அதிமுக., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் அண்ணாதுரை குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், நகர இலக்கிய அணி செயலாளர் சீனிவாசகன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமர் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராம் பாண்டியன் செய்தார்.

