/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நர்சரி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
நர்சரி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 21, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜாசிங் 51. இவர் பெரிய பள்ளிவாசல் தெருவில் சந்திரா நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இப்பள்ளியின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு நேற்று முன்தினம் மதியம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனால் ஆசிரியர்கள், பணியாளர்கள் உடனடியாக குழந்தைகளை அருகே உள்ள கட்டடத்திற்கு மாற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. போலீசார் வழக்கு பதிந்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

