UPDATED : நவ 20, 2026 08:52 PM
ADDED : நவ 20, 2026 08:52 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் எழுதிய துாக்கம் ஒரு வரம் நுால் வெளியீட்டு விழா நடந்தது. தாளாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். எஸ்.ஆசிரியர் சுதா வரவேற்றார்.
சென்னை பெரு நகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஜெயசீலன் நுாலை வெளியிட்டு பேசியதாவது: மருத்துவ உலகின் தலைசிறந்த ஐந்து கண்டுபிடிப்புகளை விட சிறந்த மருந்து துாக்கம். மனித உடலுக்கான அடிப்படை தேவை மற்றும் உரிமை துாக்கம். படிக்கும் நேரத்தை விட துாங்கும் நேரம் முக்கியமானது என ஆராய்ச்சி கட்டுரைகள் கூறுகிறது. மனித ஆற்றல் என்பது அளவிட முடியாதது மனிதனின் தனித்திறன்கள் மரபணு வழியாக எடுத்துச் செல்லப்படுவதில்லை. அறிவியல் மனப்பாங்கு அடிப்படையில் அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.,என்றார்.
டாக்டர் கு. கணேசன் ஏற்புரையாற்றினார். ஆசிரியர் தனலட்சுமி, டாக்டர் அறம், கண்மணி ராசா, தேவதாசன் பேசினர். ஏற்பாடுகளை முதல்வர் அ.சுதா தலைமையில் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்தனர்.
