/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவியல், கற்பனை; உலகங்களை ஆராயும் புத்தகங்கள்; புத்தகத் திருவிழாவில் அணிவகுக்கும் வாசகர்கள்

ADDED : நவ 17, 2025 02:17 AM

விருதுநகர்: விருதுநகர் -- மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4வது புத்தகத்திருவிழா நடந்து வருகிறது.
விடுமுறை நாளான நேற்று பயனுள்ள வகையில் கழிக்க அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக குடும்பத்தினருடன் வந்தனர். இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் பெரியவர்களுக்கான ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு தொடர்பான புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது.
நவ.24 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம். மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடக்கிறது.