/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆழ்ந்து படித்தால் சிந்தனையை வளர்க்கலாம் சொல்லிக்கொடுக்கும் புத்தகங்கள்

ADDED : நவ 23, 2025 05:01 AM

விருதுநகர்: விருதுநகர் -- மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் 4வது புத்தகத்திருவிழாவிற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் திரளாக குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு தொடர்பான புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கிறது. நவ.24 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை பார்த்து வாங்கலாம்.
மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடக்கிறது.