ADDED : நவ 23, 2025 05:02 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிக பட்சமாக 19 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை முதல் பனிமேகங்கள் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், சாத்துார், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய இடங்களில் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. காரியாபட்டி, அதனை சுற்றிய இடங்களில் நேற்று மாலை முதல் சாரல் பெய்தது.
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி ராஜபாளையம் 7 மி.மீ, காரியாபட்டி 1.20, ஸ்ரீவில்லப்புத்துார் 2.30, சாத்துார் 5.20, பிளவக்கல் 9.20 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
மேலும் திருச்சுழி 15.80 மி.மீ., விருதுநகர் 15.40, சிவகாசி 16, வத்திராயிருப்பு 10.40, கோவிலான்குளம் 17 மி.மீ., பதிவானது. அதிக பட்சமாக அருப்புக்கோட்டையில் 19 மி.மீ., பதிவாகியுள்ளது. பெரியாறு அணைக்கு வினாடிக்கு 10.49 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் அணையில் இருந்து 153 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

