ADDED : பிப் 10, 2025 12:27 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அத்திகுளம் ஓடையில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற இடத்தில் பவுடரை மிதித்தபோது தீப்பிடித்ததில் சிறுவன் ஹரிஹரன் பலத்த காயமடைந்தார்.
அத்திகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் ஹரிஹரன் 11. ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். இவர் நேற்று மதியம் 3:30 மணிக்கு அத்திகுளம் ஓடையில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற இடத்தில் கிடந்த பவுடரை மிதித்தபோது, அது வெடித்து ஹரிஹரன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தின் அருகே நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதால் அங்கு கட்டுமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பவுடர் சிந்தி கிடந்திருக்கலாம். அதில் சிறுவனின் கால் பட்டு உராய்ந்ததில் தீப்பிடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.