UPDATED : ஜூலை 06, 2026 06:02 PM
ADDED : ஜூலை 06, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ப்ரைட்ஸ் 2கே 26 என்ற நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் சண்முகராஜா வரவேற்றார். குளோப் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சந்திரபிரகாஷ் துவக்கி வைத்தார். சிவகாசி லயன்ஸ் தங்க தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி செய்தார்.
