/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து வீணாக ஓடிய குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாக ஓடிய குடிநீர்
ADDED : செப் 30, 2024 04:28 AM

சிவகாசி: சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குழாய் சண்முகம் நாடார் ரோடு, சேர்மன் ஆறுமுகம் நாடார் ரோடு வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இந்நிலையில் விளாம்பட்டி ரோடு விலக்கில் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது.
குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடுவதால், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். நடந்து செல்பவர்கள் மீது வாகனங்களால் அடிக்கும் தண்ணீர் தெறிக்கிறது.
சிவகாசியில் பொதுவாகவே 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழாய் உடைந்த இடங்களில் ரோடு சேதம் அடைந்து விட்டது. எனவே உடனடியாக சேதமடைந்த இடங்களில் குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

