/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., சின்னக்கடை பஜார் வழியாக பஸ் போக்குவரத்து
/
ஸ்ரீவி., சின்னக்கடை பஜார் வழியாக பஸ் போக்குவரத்து
ADDED : செப் 21, 2024 05:05 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டுமெனில் இரண்டு முறை நகரை சுற்ற வேண்டியுள்ளதால் சின்ன கடை பஜார் வீதி, மணிக்கூண்டு, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வழியாக பஸ்களை இயக்க காவல்துறை அனுமதிக்க வேண்டுமென அரசு பஸ் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டினை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், நகைக்கடை பஜார், தனியார் மருத்துவமனைகள், பெண்கள் பள்ளி அமைந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனால் மதுரை, தேனியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் சர்ச் சந்திப்பில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.
இது குறித்து டிரைவர் கண்டக்டர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்கின்றனர்.
இது குறித்து அரசு பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் கூறியதாவது;
தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலையில் வேலைகள் நடப்பதால் சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்குவதில் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டுமெனில் நகரினை இரண்டு முறை சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு, குறைந்தது பத்து நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை நேரம், டீசல் விரையம் ஏற்படுகிறது.
எனவே, ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து சின்ன கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வழியாக சர்ச் சந்திப்பு வரை ரோட்டின் இரு புறமும் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றியும், டூவீலர்களை ஒழுங்குபடுத்தி அந்த வழியாக பஸ்களை செல்ல அனுமதித்தால் தான் அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் சூழல் உருவாகும்.
இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.