/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் அருகிலும் வெண்ணை உருண்டை பாறை
/
ராஜபாளையம் அருகிலும் வெண்ணை உருண்டை பாறை
ADDED : ஏப் 09, 2025 02:57 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் இருந்து தென்மலை செல்லும் வழியில், குன்றக்குடி என அழைக்கப்படும் நான்கு மலை குன்றுகள் அருகருகே உள்ளன. இதில் ஒரு குன்றில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர் படுக்கை, குகைகள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளன. மற்றொரு குன்றில் மகாவிஷ்ணு சிற்பம் உள்ளது.
இரண்டுக்கும் இடைப்பட்ட குன்றின் சரிவில், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாறையை போன்று, பெரிய பாறை ஒன்று அதிசயதக்க நிலையில் நிற்கிறது.
இப்பகுதியை சுற்றியுள்ள மாங்குடி - புத்துார் மலையில் சமணர் படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளதால், இவ்விடத்தை தொல்லியல் சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், வானிறை கல் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'இது மாவட்டத்தின் கண்கவர் இயற்கை அதிசயமாக உள்ளது' என, பதிவிட்டுள்ளார்.