நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தனிநபர்கள், குழுக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய தனி நபர் கடன், குழுக்கடன் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக்கொள்ளாலம். www.tabcedco.tn.gov.in என்ற இணையத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.