ADDED : அக் 10, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தோட்டக்கலை துறை மூலம் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.60 ஆயிரம், 3ம் பரிசு ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பப்படிவத்தை தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.inல் பதிவேற்றம் செய்து, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம், என்றார்.