UPDATED : அக் 16, 2026 05:08 PM
ADDED : அக் 16, 2026 05:06 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முன் மாதிரியான சேவை விருதுக்கு பதிவு செய்து செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள், குழந்தைகளின் நலனை பேணிக்காப்பதில் திறம்பட செயல்படும் இல்லங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
சான்றுகளுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.503, 5வது தளம், புதிய கலெக்டர் அலுவலகம், விருதுநகர் – 626 002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அக்.22 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
