/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் சுற்றுச்சூழல் கல்வி மையம்
/
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் சுற்றுச்சூழல் கல்வி மையம்
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் சுற்றுச்சூழல் கல்வி மையம்
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் சுற்றுச்சூழல் கல்வி மையம்
ADDED : டிச 18, 2024 05:49 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான செண்பகத் தோப்பில், பல்லுயிர் பாதுகாப்பு, சாம்பல் நிற அணில்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் கல்வி மையத்தை மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில்கள் நிறைந்துள்ள சரணாலய பகுதி.
இப்பகுதி தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது.
அரசின் தமிழ்நாடு புதுமை முன் முயற்சி திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் மாநில திட்ட குழு இங்குள்ள பழங்குடியினர் பள்ளியை, ஒரு சுற்றுச் சூழல் கல்வி மையமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது.
அதன்படி இந்த பள்ளி கட்டடம் தற்போது சுற்றுச்சூழல் கல்வி மையமாக அழகு படுத்தப்பட்டு உள்ளது. இதன் உட்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சாம்பல் நிற அணில்கள் குறித்து எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள விளக்கம் அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நேரில் அழைத்து வரப்பட்டு பார்வையிட்டு வருகின்றனர். மேலும் வனம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. வனத்துறையின் இந்த முயற்சி மாணவர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.