/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தைகள் உதவி எண் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கலெக்டர் தகவல்
/
குழந்தைகள் உதவி எண் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கலெக்டர் தகவல்
குழந்தைகள் உதவி எண் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கலெக்டர் தகவல்
குழந்தைகள் உதவி எண் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கலெக்டர் தகவல்
ADDED : நவ 13, 2024 11:44 PM
விருதுநகர் ; விருதுநகர் அருகே ஆமத்துார் ஏ.ஏ.ஏ., பொறியியல் கல்லுாரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, யங் இந்தியா, சிவகாசி தன்னார்வ அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: 18 வயதிற்குள் உள்ள சிறுமிகள் திருணம் மூலம் குழந்தை பெறும் சூழல் இருக்கிறதா என்ற தரவுகளை எடுத்து பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் 500 முதல் 600 குழந்தை திருமணங்கள் நடக்கிறது. இதற்கு சமூக காரணங்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு இன்மை, வயது பருவத்திற்கு ஏற்ப அவரவர் செயல்பாடுகள் உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளது.
18 வயதிற்கு கீழே ஒரு குழந்தைக்கு திருமணம் என்பது சட்டத்தால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது, என்றார்.