/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த அங்கன்வாடி மையம் பள்ளி வராண்டாவில் சிறுவர்கள்
/
சேதமடைந்த அங்கன்வாடி மையம் பள்ளி வராண்டாவில் சிறுவர்கள்
சேதமடைந்த அங்கன்வாடி மையம் பள்ளி வராண்டாவில் சிறுவர்கள்
சேதமடைந்த அங்கன்வாடி மையம் பள்ளி வராண்டாவில் சிறுவர்கள்
ADDED : செப் 26, 2024 04:32 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அங்கன்வாடி மையம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அங்குள்ள சிறுவர்களை அருகில் உள்ள பள்ளி வராண்டாவில் உட்கார வைக்கப்பட்டும், மதிய உணவை திறந்த வெளியில் ஊட்டப்படும் அவல நிலையில் உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே நகராட்சி 36வது வார்டு ராமசாமிபுரத்தில் நகராட்சியின் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, தற்போது 28 சிறுவர்களுக்கு மேல் உள்ளனர். கட்டடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், சேதமடைந்து விட்டது. சுவர்கள் விரிசல் கண்டு உள்ளன. கட்டடத்தின் கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்களால் வேயப்பட்டுஉள்ளதால், மழை காலத்தில் ஒழுகுகிறது.
கட்டடத்தின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்குள்ள சிறுவர்கள் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அங்கும் பள்ளி வராண்டாவில் தான் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. போதுமான இடமில்லாததால் மதிய உணவை திறந்த வெளியில் தான் சிறுவர்களுக்கு தாய்மார்கள் ஊட்டுகின்றனர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக கட்டடம் மோசமான நிலையில் உள்ளது. புதிய கட்டடம் கட்ட நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் நவீன அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.