/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை நகராட்சி பூங்காக்களில் குடிமகன்கள் அட்டகாசம்
/
அருப்புக்கோட்டை நகராட்சி பூங்காக்களில் குடிமகன்கள் அட்டகாசம்
அருப்புக்கோட்டை நகராட்சி பூங்காக்களில் குடிமகன்கள் அட்டகாசம்
அருப்புக்கோட்டை நகராட்சி பூங்காக்களில் குடிமகன்கள் அட்டகாசம்
ADDED : நவ 04, 2024 05:29 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள ஒரு சில பூங்காக்களில் குடிமகன்கள் குடித்து விட்டு துாங்குவதால் மக்கள் வர தயங்குகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் நகரின் பல பகுதிகளில் 7க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில பராமரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மற்றவை பராமரிப்பு இல்லாமல் பூட்டிய கிடக்கிறது. இதில் சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானத்திற்கு அருகில் புதிய பூங்கா திறக்கப்பட்டது. குழந்தைகள் விளையாட உபகரணங்கள், நடைபாதை, நீரூற்று உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்களும் காலை, மாலை நேரங்களில் பூங்காவிற்கு வந்து பொழுதை போக்கினர். இந்த பூங்கா, சில பூங்காக்கள் தனியாக மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மயான ரோட்டில் உள்ள பூங்கா தற்போது முறையாக செயல்படுவது இல்லை. பெரும்பாலும் மாலை நேரங்களில் பூட்டி கிடக்கிறது. மதிய நேரம் குடிமகன்கள் இங்கு வந்து குடித்துவிட்டு போதையில் படுத்து துாங்குகின்றனர். இதனால் மாலை நேரங்களில் மக்கள் வர தயங்குகின்றனர்.
மேலும் சாய்பாபா கோயில் அருகில் பூங்கா ஒரு வாரமாக திறக்கப்படாமலேயே உள்ளது. நகராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு பூங்காவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியாத நிலையில் இருப்பதால் பூங்கா திறக்கப்படுவது இல்லை. நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு முறையாக பூங்காக்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.