ADDED : செப் 20, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி கண்காணிப்பு பணிகள், அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மருந்துகள் இருப்பு, உழவர் சந்தையில் காய்கறி விலை நிர்ணயம், எடைக்கல், கூடுதல் விவசாயிகள், நுகர்வோர் வருவதை அதிகரிக்க, திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்காத குப்பைகள் தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் பணிகள், சேகரிக்கும் முறை, குடிநீர் ஆதாரமாக இருக்கும் குளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வு செய்தார்.