/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் தேரோட்ட வீதிகளில் கலெக்டர் ஆய்வு
/
ஸ்ரீவி., ஆண்டாள் தேரோட்ட வீதிகளில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2025 11:40 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேரோடும் ரத வீதிகளை கலெக்டர்  சுகபுத்ரா தலைமையிலான அரசு அதிகாரிகள் குழுவினர் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
இக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  ஜூலை 28ல்  தேரோட்டம் நடக்கிறது. நேற்று காலை 12:45 மணிக்கு கலெக்டர் சுகபுத்ரா,  எஸ்.பி கண்ணன் நான்கு ரத வீதிகளில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர். இதில் ஆக்கிமிரப்புகள் அகற்றுதல், சேதமான ரோடுகளை சீரமைத்தல்,  கழிவுகளை அப்புறப்படுத்துதல் என பணிகளை காலதாமதம் இன்றி செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார்.
மக்கள் எதிர்பார்ப்பு
தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளில் மட்டும்  கண்துடைப்பாக ஆக்கிமிரப்புகள் அகற்றும் பணி செய்யப்படுகிறது. ஆனால் பஸ் ஸ்டாண்டிலிருந்து நகைக்கடை பஜார், பெரிய கடை பஜார் வழியாக ஆண்டாள் கோயில் வரை அதிகளவில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பாதையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

