ADDED : ஜூலை 30, 2025 06:51 AM
சாத்துார் : சாத்துார் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுகபுத்திரா நேற்று ஆய்வு செய்தார்.
சாத்துாரில் நகராட்சி துவக்க பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தையும், புதியபஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ள இடத்தையும்,புதிய மின் மயானம் அமைக்கப்படும் பணியையும் ஆய்வு செய்தார். இருக்கன்குடி அணைக்கு சென்று அணையின் கொள்ளளவு ,தற்போதைய நீர் இருப்பு பயன்பெறும் பாசன நிலங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். இருக்கன்குடி ஆட்டுப்பண்ணைக்கு சென்ற கலெக்டர் அங்கு ஆடுகள் வளர்ப்பு குறித்தும் ஆட்டுப்பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தவுடன் அங்கு மரக்கன்று நட்டார்.
அவருடன் ஆர்.டி.ஓ கனகராஜ் தாசில்தார் ராஜாமணி நகராட்சி ஆணையர் ஜெகதீஸ்வரி மற்றும் உதவி பொறியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.