sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இடியும் நிலையில் சமுதாய கூடம்: சேதமடைந்த வாறுகால்

/

இடியும் நிலையில் சமுதாய கூடம்: சேதமடைந்த வாறுகால்

இடியும் நிலையில் சமுதாய கூடம்: சேதமடைந்த வாறுகால்

இடியும் நிலையில் சமுதாய கூடம்: சேதமடைந்த வாறுகால்


ADDED : அக் 11, 2024 04:40 AM

Google News

ADDED : அக் 11, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: சேதமான வாறுகால், சமுதாய கூடம், விலை கொடுத்து வாங்கும் குடிநீர், பராமரிப்பில்லாத மயான பாதை உட்பட பல்வேறு பிரச்னைகளில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் அருந்ததியர் காலனி மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையின் அருகில் உள்ளது அருந்ததியர் காலனி. இங்கு 7க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. வேறு வழி இல்லாமல் மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அருகில் ஊராட்சி மூலம் கட்டப்பட்ட பொது கழிப்பறை உள்ளது. இதுவும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குளியல் தொட்டி இல்லை.

இங்குள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. இப்பகுதியினரின் மயானம் எந்தவித பராமரிப்பு இன்றி உள்ளது. மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. பாதையில் கழிவு நீர் குளமாக தேங்கி கிடப்பதால் நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர், தெரு விளக்கு வசதி செய்து தரப்பட வேண்டும். குடிநீர் வசதி இல்லாததால் அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

போர்வெல் தண்ணீர் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. ஊராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்க வேண்டும். தெருக்களில் வாறுகால்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், இடிந்தும் சேதம் அடைந்தும் உள்ளது. கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இணைப்புகள் வழங்கப்படவில்லை. காலனி 4 வது வார்டில் பேவர் பிளாக் ரோடு, வாறுகால் அமைக்க வேண்டும்.

வாறுகால் இல்லை


செல்வி, குடும்ப தலைவி: ராமானுஜ புரம் அருந்ததியர் காலனியில் பல தெருக்களில் வாறுகால்கள் இடிந்துள்ளது. வீடுகளின் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடாக உள்ளது. வாறுகால்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், புதியதாக கட்டி கழிவுநீர் சீராக செல்லும் வகையில் அமைக்க வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மயான பாதை இல்லை


பாண்டியராஜ், விவசாயி: அருந்ததியர் காலனி மக்களுக்கு என உள்ள ஊராட்சி மயானம் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மயானத்திற்குச் செல்லும் பாதை மோசமாக உள்ளது. கழிவுநீர் தேங்கியும் நடக்க முடியாத அளவிற்கு கரடு முரடாக உள்ளது. புதியதாக பாதை அமைத்து தெரு விளக்கு, தண்ணீர் உட்பட வசதிகள் செய்யப்பட வேண்டும். இரவு நேரங்களில் சிரமப்பட வேண்டி உள்ளது.

தண்ணீர் பிரச்சனை


மஞ்சுளா, குடும்பதலைவி: அருந்ததியர் காலனியில் தண்ணீர் கஷ்டம் அதிகமாக உள்ளது. குடிப்பதற்கு ஊராட்சி மூலம் குடிநீர் வசதி இல்லை. புழக்கத்திற்கு விடப்படும் தண்ணீர் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். தண்ணீருக்காகவே அதிகம் செலவழிக்க வேண்டி உள்ளது. ஊராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us