நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள லயன்ஸ் கிளப் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் கிருபா ராஜ்குமார் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் கவர்னர் அய்யாதுரை பேசினார். ஏழை பெண்கள் 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது. விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டூவீலர்கள் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.
வட்டார தலைவர் குருசாமி, செயலாளர் ஓம்ராஜ், பொருளாளர் முத்துவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதியோர் இல்லத்தில் அன்னதானம், சாலை ஓர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கப்பட்டது.

