/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகள் செய்த பின்பும் பணம் பெற முடியாமல் அலையும் ஒப்பந்ததாரர்கள்
/
பணிகள் செய்த பின்பும் பணம் பெற முடியாமல் அலையும் ஒப்பந்ததாரர்கள்
பணிகள் செய்த பின்பும் பணம் பெற முடியாமல் அலையும் ஒப்பந்ததாரர்கள்
பணிகள் செய்த பின்பும் பணம் பெற முடியாமல் அலையும் ஒப்பந்ததாரர்கள்
ADDED : டிச 24, 2024 04:07 AM
அருப்புக்கோட்டை: ஊராட்சிகளில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் உடனடியாக குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை செய்துவிட்டு 6 மாதங்களாக செய்த பணிகளுக்கு பணம் பெற முடியாமல் ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அலைந்த நிலையில் உள்ளனர்.
அதிகாரிகள் மாறுதலாகி சென்று விட்டனர். இதனால் செய்து முடித்த பணிகளுக்கு பணத்தை எவ்வாறு பெறுவது என ஒப்பந்தக்காரர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். வறட்சி நிவாரண பணிகள் செய்த முடித்தவுடன் பில் பாஸ் செய்வது வழக்கம். ஆனால் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சென்னையில் இருந்து பணம் வர வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த பணிகளுக்கும் பணம் ஒரு பகுதி தான் வந்துள்ளது. இதில் மீண்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளைச் செய்ய டெண்டர் விடும் முனைப்பில் அதிகாரிகள் உள்ளனர். ஏற்கனவே செய்த பணிகளுக்கு யாரிடம் ரூபாய் பெற பெறுவது என ஒப்பந்ததாரர்கள் புலம்பியடி உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.