/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டுறவு கடன்கள் சிறப்பு தீர்வுத்திட்டம்
/
கூட்டுறவு கடன்கள் சிறப்பு தீர்வுத்திட்டம்
ADDED : டிச 10, 2024 04:42 AM
விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட சிறு வணிகம், தொழில், வீட்டு வசதிக்கடன் ஆகிய பல்வேறு வகை பண்ணை சாராக் கடன்கள், வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடம் இருந்து வர வேண்டிய பணம் 2022 டிச. 31ல் தவணை நிலுவை கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வுத்திட்டம் 2023 செயல்படுத்தப்படுகிறது.
கடனை தீர்வு செய்ய 2024 செப் 12க்கு முன் 25 சதவீதம் பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்யாதவர்கள், ஒப்பந்தம் செய்தும் மீதி 75 சதவீதம் பணம் செலுத்தாதவர்கள், மொத்த கடனையும் ஒரே தவணையில் செலுத்தி கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் 2022 டிச. 31ல் முழு தவணையும் தவறி மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேளாண், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள், மகளிர், சிறு தொழில் கடன்கள் உள்ளிட்டவை 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் 2025 மார்ச் 12க்குள் ஓரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம், என்றார்.