/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலெக்டர் அலுவலகத்தில் மண்தரையில் அமர்ந்து சாப்பிட்ட மாணவர்கள் பூட்டிக் கிடக்கும் கூட்டரங்கில் ஒன்றை ஒதுக்கலாமே

ADDED : ஆக 27, 2025 12:23 AM

விருதுநகர்; விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள், ஆலோசனைகள் பெறுவதற்காக வரும் மாணவர்களுக்கு உண்பதற்கு காலியாக உள்ள ஹால் போன்ற கூட்டரங்குகளை ஒதுக்க வேண்டும். நேற்று வந்த மாணவர்கள் கடும் வெப்பமான சூழலில்மண் தரையில் அமர்ந்து சாப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டு 8 மாதங் களுக்கு மேலாகியும், இன்னும் ஒரு முறையான வசதிகள் கிடைக்க பெறாத நிலை உள்ளது.
அலுவலக நல்லிகளில் தண்ணீர் வருவதில்லை. ஜன்னல் ஓரங்களில் குப்பை கொட்டுவது போன்ற அலட்சியங்கள் தொடர்கின்றன.
மேலும் ஒவ்வொரு தளங்களிலும் வைக்கப்பட்ட மினரல் குடிநீர் பிளான்ட் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி, விழிப்புணர்வு, கருத்தரங்கு, உயர்கல்வி ஆலோசனை போன்றவற்றிற்காக வரவழைக்கப்படும் மாணவர்களுக்கு மதிய உணவு உண்ணும் போது அமர்ந்து உட்கார வசதி இல்லை.
நேற்று நடந்த உயர்கல்வி ஆலோசனை நிகழ்வுக்கு பின் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து உண்டனர். புதிய கலெக்டர் அலுவலகத்தில் நான்கைந்து கூட்டரங்குகள் உள்ளன.
இதில் ஒன்றை திறந்து விட்டு மாணவர்களுக்கு உண்ண ஏற்பாடு செய்திருக்கலாம். வெயில் நேற்று இயல்பை விட அதிகம் அடித்ததால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு தேவையான வசதிகளை செய்வதோடு, இது போன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்படும் மாணவர்களுக்கும் தேவையான உதவிகள் செய்ய வேண்டும்