/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி பலி
/
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி பலி
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி பலி
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி பலி
ADDED : டிச 14, 2024 02:15 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடன் பிரச்னையால் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலைக்கு முயன்றனர். இதில் மனைவி முத்துமாரி 35, பலியானார். கணவர் கணேசன் 45, மற்றும் இரு குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.
ராஜபாளையம் அருகே சேத்துார் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் - முத்துமாரி தம்பதிக்கு மகள் குரூப் பிரியா 15, மகன் சபரிநாதன் 13, உள்ளனர். கணேசன் ஓட்டலில் சமையல் மாஸ்டராகவும், முத்துமாரி தையல் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தனர்.
ஓராண்டுக்கு முன் கணேசன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தார். மருத்துவ சிகிச்சை குடும்ப செலவுக்காக ரூ.2 லட்சம் வரை நண்பர்களிடம் கடன் பெற்றார்.
கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கணேசன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்து இனிப்பில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து அவரும், மனைவியும் சாப்பிட்டனர். குழந்தைகள் வாந்தி எடுத்த நிலையில் மயக்க நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் முத்துமாரி இறந்தார்.
கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குருபிரியா, சபரிநாதன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.