ADDED : ஜன 21, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டி எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் கந்தசாமி 70, சுந்தராம்பாள் 65, தம்பதியினர் பழைய வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் மழை பெய்த போது வீட்டின் பக்கவாட்டு சுவர் அதை தாங்கி இருந்த ஓட்டு தாழ்வாரம் தம்பதியினர் மீது விழுந்தது. இதில் சுந்தராம்பாள் தலையில் காயத்துடனும், கந்தசாமிக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் உயிர் பிழைத்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

