ADDED : ஏப் 02, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் ராகவன் 36, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார்.
மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் போனை வைத்துவிட்டு மாதா மலை செல்வதாக சொல்லி சென்றவர், அங்கு எலி மருந்தை குடித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

